/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் நுாலகத்தில் கருத்தரங்கம்
/
விருத்தாசலம் நுாலகத்தில் கருத்தரங்கம்
ADDED : டிச 11, 2024 05:01 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் கிளை நுாலகத்தில் 'நாளை உலகம் நமக்கானது' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
இந்த கருதரங்கத்திற்கு, மாவட்ட நுாலக அலுவலக இருப்பு சரிபார்ப்பு அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். இரண்டாம் நிலை நுாலகர் ரகுநந்தனன் வரவேற்றார்.
போட்டி தேர்வு பயிற்சியாளர் எழிலன் கலந்து கொண்டு, போட்டி தேர்வு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் 2024ம் ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பணிக்கு செல்லும் அய்யப்பன், பாலா, வெங்கடேசன், கிருஷ்ண மூர்த்தி, சதீஷ், வெற்றிச்செல்வி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். ஓய்வு பெற்ற கல்லுாரி நுாலகர் மாணிக்கசிவசாமி மற்றும் மாணவர்கள், வாசகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மூன்றாம் நிலை நுாலகர் பவித்ரா நன்றி கூறினார்.

