/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல் மூட்டைகள் ரயிலில் அனுப்பி வைப்பு
/
நெல் மூட்டைகள் ரயிலில் அனுப்பி வைப்பு
ADDED : ஆக 26, 2025 07:39 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மாவட்டத்தில் குறுவை சாகுபடி நெல் அறுவடை தீவிரமடைந்து வரும் நிலையில், விவசாயிகள் நலன் கருதி, கடலுார், விருத்தாசலம், சிதம்பரம் உட்கோட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
இங்கு, தினசரி கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், ஆங்காங்கே உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு, 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் எடுத்து வரப்பட்டு, சரக்கு ரயிலில் ஏற்றும் பணி தீவிரமாக நடந் தது.