
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மாவட்ட மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில், செந்தொண்டர் மாவட்ட பயிற்சி முகாம் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அமர்நாத் வரவேற்றார்.
மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசினார். இதில், செந்தொண்டர் அணியினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது, மாநில கன்வீனர் ஸ்டாலின், மாவட்ட கன்வீனர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் நன்றி கூறினார்.