/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சீனியர் பூப்பந்து போட்டி; கடலுார் அணி சாதனை
/
சீனியர் பூப்பந்து போட்டி; கடலுார் அணி சாதனை
ADDED : ஜன 02, 2025 06:42 AM

பண்ருட்டி; மாநில அளவிலான ஆண்களுக்கான சீனியர் பூப்பந்து போட்டி செங்கல்பட்டு ராமகிருஷ்ணா பள்ளியில் நடந்தது.
இதில் கடலுார், அரியலுார்,திருநெல்வேலி, திருப்பத்துார், சென்னை உள்ளிட்ட 33 மாவட்ட அணிகள் பங்கேற்றன.
இதில், கடலுார் மாவட்டம் சார்பில் முஜிபூர், சக்திவேல், விஸ்வா, ரிஜ்வான், ஆசிப், உஸ்மான், சூர்யா, மணி, மகேஷ், அப்துல் ஆகியோர் விளையாடினர். போடடியில் திண்டுக்கல் அணியினர் முதல் பரிசு பெற்றனர். கடலுார் மாவட்ட அணி 25 ஆண்டுக்கு பிறகு வெள்ளி கோப்பையை பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களை கடலுார் மாவட்ட பூப்பந்து கழக தலைவர் ராகவ் தினேஷ், துணைத் தலைவர் பழனி, செயலர் திருவிக்ரமன், வசந்தரூபன், கவுரவ தலைவர் பரந்தாமன், மாநில நடுவர் பொன்னிவளவன், நுார்தீன், சந்திரன், முத்து, ஸ்ரீதர், சீனியர் வீரர் சுந்தர், தமிழ் ஆகியோர் பாராட்டினர்.