/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூத்த குடிமக்கள் சங்க 8ம் ஆண்டு விழா
/
மூத்த குடிமக்கள் சங்க 8ம் ஆண்டு விழா
ADDED : டிச 31, 2024 07:01 AM

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் நகர மூத்த குடிமக்கள் நலச்சங்க 8ம் ஆண்டு துவக்கவிழா நடந்தது.
தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கண்ணன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் அஷ்ரப்அலி வரவேற்றார்.
மனித உரிமை கழக தேசிய துணைத் தலைவர் முருகன் சிறப்புரையாற்றினார். மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு வழங்கும் காப்பீட்டு அட்டையின் அவசியம், முதியோருக்கு அரசு வழங்கும் திட்டங்கள் பற்றியும் விளக்கினர். மேலும், ஒவ்வொரு நகரத்திலும் மூத்த குடிமக்கள் சங்கத்துக்கு தமிழக அரசு கட்டடம் கட்டித்தர வலியுறுத்தவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புண்ணியர் பேரவை அறக்கட்டளை நிறுவனர் அம்சா பாஸ்கரன், அரிமா ஸ்ரீதரன், ராஜேந்திரன், லோகநாதன் கலந்து கொண்டனர்.