/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவருள் இறைப்பணி மன்ற சொற்பொழிவு
/
திருவருள் இறைப்பணி மன்ற சொற்பொழிவு
ADDED : அக் 21, 2024 06:37 AM
புவனகிரி: புவனகிரி திருவருள் இறைப் பணி மன்றம் சார்பில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
புவனகிரி திருவருள் இறைப் பணி மன்றம் சார்பில் மாதம் தோறும் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
இந்த மாதத்திற்கான நிகழ்ச்சி நேற்று சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நடந்தது. தேவாங்க சமூக நாட்டாண்மை ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார். 63 நாயனார்களில் ஒருவரான காரி நாயனார் குறித்து ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அலுவலர் மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில் சுற்றுபகுதி யினர் பங்கேற்றனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
ஏற்பாடுகளை திருவருள் இறைப்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

