தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சர்வீஸ் சாலை 'பஞ்சர்' :வாகன ஓட்டிகள் அவதி 

சர்வீஸ் சாலை 'பஞ்சர்' :வாகன ஓட்டிகள் அவதி 

சர்வீஸ் சாலை 'பஞ்சர்' :வாகன ஓட்டிகள் அவதி 


UPDATED : ஜூன் 23, 2026 04:24 PM

ADDED : ஜூன் 23, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2026 04:24 PM ADDED : ஜூன் 23, 2026 04:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்:குண்டும் குழியுமான பெ.பொன்னேரி சர்வீஸ் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்ணாடத்தில் இருந்து பெ.பொன்னேரி சர்வீஸ் சாலை வழியாக ஜெயங்கொண்டம், அரியலுார் செல்லும் சாலையை பயன்படுத்தி பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் ஆயிரக்கணக்கில் செல்கின்றன. போதிய பராமரிப்பின்றி உள்ள இச்சாலை பல இடங்களில் குண்டும் குழியாக உள்ளது.

இதனால் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி கீழே விழும்போது அவ்வழியே சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

எனவே, குண்டும் குழியுமான பெ.பொன்னேரி சர்வீஸ் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us