/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் பகுதியில் எள் விளைச்சல் அமோகம்
/
பெண்ணாடம் பகுதியில் எள் விளைச்சல் அமோகம்
ADDED : மார் 28, 2025 05:27 AM

பெண்ணாடம்; பெண்ணாடம் பகுதியில் சாகுபடி செய்துள்ள எள் பயிர் செழிப்பாக வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த கோவிலுார், எரப்பாவூர், மாளிகைக்கோட்டம், அரியராவி, பெ.பூனுார், தாழநல்லுார், கோனுார், பெலாந்துறை, இருளம்பட்டு, கொசப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன் எள் விதைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
தற்போது, எள் செடியில் அதிகளவில் பூ பூத்து, காய்ப்பு திறன் அதிகரித்துள்ளதால் அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எரப்பாவூர் விவசாயி கூறுகையில், 'ஆண்டுதோறும் தை - மாசி பட்டத்தில் 3 மாத பயிரான எள் விதைப்பது வழக்கம். அதற்காக டி.எம்.வி - 3 ரக எள் விதையை அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கி விதைத்துள்ளேன். தற்போது பூக்கள் பூத்து காய்ப்புத்திறனும் உள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.