
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : முத்துகிருஷ்ணாபுரம் முத்தானந்தா சக்தி அம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது.
பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் முத்தானந்தா சக்தி அம்மன் கோவிலில் செடல் திருவிழாவையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் சாகை வார்த்தல் நடந்தது. அதனைத் தொடர்ந்து செடல் திருவிழா நடந்தது. பக்தர்கள் முதுகில் அலகு குத்தி பஸ், தேர் இழுத்தனர்.
முதுகில் அலகு குத்திக் கொண்டு கிரேனில் தொங்கியபடி நேர்த்தி கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.