
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : குயிலாப்பாளையம் முத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது.
பாலுார் அருகே உள்ள குயிலாப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை கெடிலம் ஆற்றிலிருந்து பக்தர்கள் வாயில் அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடியும் ஊர்வலமாக வந்தனர். அதனை தொடர்ந்து செடல் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தனர்.