/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறு வட்ட சதுரங்கப்போட்டிக்கு ஏழு மாணவர்கள் தேர்வு
/
குறு வட்ட சதுரங்கப்போட்டிக்கு ஏழு மாணவர்கள் தேர்வு
குறு வட்ட சதுரங்கப்போட்டிக்கு ஏழு மாணவர்கள் தேர்வு
குறு வட்ட சதுரங்கப்போட்டிக்கு ஏழு மாணவர்கள் தேர்வு
ADDED : ஜூலை 10, 2025 12:32 PM

புவனகிரி: புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த, பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டியில், ஏழு பேர் வெற்றி பெற்று குறு வட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
அரசு பள்ளிகளில் மாணவர்களை விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் நோக்கில் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசு வழங்கி வருகின்றன். அந்த வகையில் பள்ளி அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வயது அடிப்படையில் போட்டிகள் நடத்தி வருகின்றனர்.
புவனகிரி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த போட்டியை தலைமை ஆசிரியர் சத்தியநாராயணன் துவக்கி வைத்தார். ஆசிரியர் குழுவினர் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தார். இதில் சதுரங்கப்போட்டியில் 11 வயதினருக்கான பிரிவில் தரணிராஜ், பெண்கள் பிரிவில் அஷ்வதா, வர்ஷினி, 14 வயதினருக்கான ஆண்கள் பிரிவில் முகேஷ், சமர்ஜித்ராஜ், பெண்கள் பிரிவில் யாழினி மற்றும் எஸ்.யாழினி ஆகிய ஏழு பேர் வெற்றி பெற்று, புவனகிரி குறுவட்ட மைய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

