/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பு: கடலுார் எம்.எல்.ஏ., ஆறுதல்
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பு: கடலுார் எம்.எல்.ஏ., ஆறுதல்
குடிநீரில் கழிவுநீர் கலப்பு: கடலுார் எம்.எல்.ஏ., ஆறுதல்
குடிநீரில் கழிவுநீர் கலப்பு: கடலுார் எம்.எல்.ஏ., ஆறுதல்
ADDED : அக் 30, 2025 07:40 AM

கடலுார்: கடலுார் அருகே குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் பாதிக்கப்பட்ட மக்களை, எம்.எல்.ஏ.,நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடலுார் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலருக்கு அடுத்தடுத்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
தகவலறிந்த சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், கழிவுநீர் கலந்த குடிநீரை பொதுமக்கள் குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தது. இதையடுத்து அக்கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
மருத்துவக்குழுவினர் பொதுமக்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். தகவலறிந்த அய்யப்பன் எம்.எல்.ஏ., நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, மருத்துவ முகாமை பார்வையிட்டார்.
இதில், பி.டி.ஓ.,க்கள் சக்தி, பாண்டியன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராதாகிருஷ்ணன், முத்துக்குமாரசாமி, ராமலிங்கம், ஞானம், மனோகர், சுதாகர் உட்பட பலர் உடனிருந்தனர்.

