/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பு : 20 பேருக்கு வாந்தி மயக்கம்
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பு : 20 பேருக்கு வாந்தி மயக்கம்
குடிநீரில் கழிவுநீர் கலப்பு : 20 பேருக்கு வாந்தி மயக்கம்
குடிநீரில் கழிவுநீர் கலப்பு : 20 பேருக்கு வாந்தி மயக்கம்
ADDED : நவ 04, 2025 01:48 AM
நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த சன்னியாசிப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பாலுார், சன்னியாசிப்பேட்டை பழைய காலனியில் 50 க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் மேல்நிலைநீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம் போல் குடிநீர் வழங்கப்பட்டது. குடிநீரை குடித்த அப்பகுதியை சேர்ந்த பாமாவதி, 41; ஏழைமுத்து, 62; ராகுல், 22; கமலேஷ்,19; சந்தோஷ்,16; கோமதி, 44; சாந்தி,47; உள்ளிட்ட சிலருக்கு வாந்தி,பேதி ஏற்பட்டது.
தொடர்ந்து அமுதவிழி,13; கலைமாறன்,16; பராசக்தி, 51; மணிமேகலை, 40; விஷ்ணுபிரியா,16; செல்வி,36; அன்புசெல்வன்,14; தமிழ்செல்வன்,17 உள்ளிட்டோருக்கு காய்ச்சல் அதிகமானதால் கீழ்அருங்குணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
கீழ்அருங்குணம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பழைய காலனி பகுதியில் மருத்துவ குழுவினர்கள் அப்பகுதி மக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். அப்பகுதியில் உடைந்து கிடந்த குடிநீர் பைப்பை ஒன்றிய அதிகாரிகள் சரி செய்தனர். மேலும் சாந்தி, அஞ்சாலட்சம், யாழ்திலிபன், காந்தாமணி ஆகியோர் கடலுார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

