/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீருடன் கழிவுநீர் கலப்பு; நெல்லிக்குப்பத்தில் அவலம்
/
குடிநீருடன் கழிவுநீர் கலப்பு; நெல்லிக்குப்பத்தில் அவலம்
குடிநீருடன் கழிவுநீர் கலப்பு; நெல்லிக்குப்பத்தில் அவலம்
குடிநீருடன் கழிவுநீர் கலப்பு; நெல்லிக்குப்பத்தில் அவலம்
ADDED : மார் 07, 2024 01:31 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்கத்துக்காக பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாய் உடைந்து, குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை கன்னியாக்குமரி தொழில்வட சாலை விரிவாக்க பணியின் ஒரு கட்டமாக கடலூரில் இருந்து மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணிகள் நடக்கிறது. தற்போது நெல்லிக்குப்பம் நகர பகுதியில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணிக்காக இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. அப்போது குடிநீர் குழாய்கள் உடைவதால் நகர பகுதி முழுவதும் புதியதாக குடிநீர் குழாய் அமைக்க 4 கோடி செலவாகும் என மதிப்பீடு தயார் செய்து ஒப்பந்ததாரரிடம் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு சம்மதிக்காமல், தொடர்ந்து பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று பணி நடந்த திரவுபதி அம்மன் கோவில் எதிரில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது. மேலும் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

