/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையில் கழிவுநீர் தேக்கம் நெல்லிக்குப்பத்தில் அவலம்
/
சாலையில் கழிவுநீர் தேக்கம் நெல்லிக்குப்பத்தில் அவலம்
சாலையில் கழிவுநீர் தேக்கம் நெல்லிக்குப்பத்தில் அவலம்
சாலையில் கழிவுநீர் தேக்கம் நெல்லிக்குப்பத்தில் அவலம்
ADDED : பிப் 20, 2024 03:02 AM

நெல்லிக்குப்பம் : சென்னை- கன்னியாகுமரி தொழில் அபிவிருத்தி சாலை பணியின் ஒரு கட்டமாக, கடலூரில் இருந்து மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணி நடக்கிறது. நெல்லிக்குப்பம் நகர பகுதியில் இதற்காக சாலையின் இருபுறமும் நகராட்சியால் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் அகற்றப்பட்டு, புதியதாக வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பணியில் நெல்லிக்குப்பம் விநாயகர் கோவில் அருகில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை மழைநீர் வடிகால் அமைக்காமல் சாலை போட்டனர். தற்போது ரெடிமேடாக வாய்க்கால் பொறுத்தும் பணி நடக்கிறது. கால்வாய் இணைப்பு இல்லாமல் துண்டு துண்டாக போடப்பட்டுள்ளது.
இதனால் சாலையோரம் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் கழிவுநீரிலேயே நடக்க வேண்டியுள்ளது. சாலையில் தண்ணீர் தேங்குவாதல் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, வடிகால் பணியை விரைந்த முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

