ADDED : மே 31, 2025 11:46 PM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் 'தினமலர்' செய்தி எதிரொலியாக கழிவுநீர் கால்வாய் துாய்மை பணி நடந்தது.
சென்னை-கன்னியாகுமரி தொழில் அபிவிருத்தி திட்டத்தில் கடலுாரில் இருந்து மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணி நடந்தது. இதில், நெல்லிக்குப்பம் நகர பகுதியில் புதியதாக சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது.
விநாயகர் கோவில் அருகில் மற்றும் சில இடங்களில் கால்வாயை முறையாக இணைக்காமல் கடந்த ஒரு ஆண்டாக பணி பாதியிலேயே கிடப்பில் உள்ளது. இதனால், சாலையோர கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வழிந்து சாலையில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து, கமிஷனர் கிருஷ்ணராஜன் முன்னிலையில், டேங்கர் லாரி மூலம் தற்காலிகமாக கழிவநீர் அகற்றும் பணி நடந்தது. கால்வாய் பணியை முறையாக இணைக்க நடவடிக்கை எடுக்கும்படி ஒப்பந்ததாரருக்கு அவர் உத்தரவிட்டார். தி.மு.க.தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.