ADDED : அக் 16, 2025 11:39 PM
நெல்லிக்குப்பம்: தினமலர் செய்தி எதிரொலியால் நெல்லிக்குப்பம் அண்ணாமலை தெருவிலுள்ள கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்பட்டது.
நெல்லிக்குப்பம் நகராட்சி 9 வது வார்டு அண்ணாமலை தெருவிலுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல நகராட்சி மூலம் வாய்க்கால் கட்டியுள்ளனர்.இந்த கழிவுநீர் முழுவதும் பக்கத்திலுள்ள ராமு தெருவில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் இணைத்திருந்தனர்.
இதற்கிடையில் ராமு தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடந்ததால், அண்ணாமலை தெருவிலுள்ள கழிவுநீர் வாய்க்கால் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லை. இதனால் அண்ணாமலை தெருவிலுள்ள வீடுகளின் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வாய்க்காலில் நிரம்பி வழிந்து, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து நகராட்சி கமிஷ்னர் கிருஷ்ணராஜன் மேற்பார்வையில் சம்பந்தப்பட்ட கால்வாய் சீரமைக்கப்பட்டது.