/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அலுவலக உதவியாளர் மீது பாலியல் புகார்
/
அலுவலக உதவியாளர் மீது பாலியல் புகார்
ADDED : ஆக 18, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், பீச்ரோட்டை சேர்ந்தவர் சுதாகர். கடலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார். இவர், 42 வயது பெண்ணுடன் பழகினார்.
இதற்கிடையே, கடந்த 2023ம் ஆண்டு, சுதாகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், வீட்டி லிருந்து நகை, பணத்தையும் எடுத்து சென்று விட்டதாகவும், இதனை கேட்டதால் சுதாகர், அவரது மனைவி ஜெயப்பிரியா மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண், கடலுார் புதுநகர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார், சுதாகர், ஜெயப்பிரியா மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.