நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மங்கலம்பேட்டை அடுத்த வீராரெட்டிகுப்பம் விவசாயி ஆனந்தசாமி. பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலையில் பட்டியில் இருந்த ஆடுகளில் இரண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தன. மர்ம காய்ச்சலால் ஆடுகள் இறந்தது தெரிய வந்தது. தொடர் மழை பெய்து வரும் நிலையில் ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கால்நடைத்துறை முகாமிட்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.