ADDED : மார் 25, 2025 06:52 AM
வேப்பூர் : வேப்பூர் அருகே 2 ஆடுகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பூர் கூட்டுரோட்டில் போலீசார் நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த டி.வி.எஸ்., எக்செல் மோட்டார் சைக்கிளில் 2 ஆடுகளுடன் வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது, ஒருவர் தப்பி ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார் மற்ற இரண்டு பேரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர்கள், சின்னசேலத்தை சேர்ந்த பாலமுருகன், 39; வெங்கடேசன், 42; ஜெயராமன் என்பதும், மூவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு வேப்பூர் அடுத்த ஏ.கொளப்பாக்கம் கிராமத்தில் இருந்து 2 ஆடுகளை திருடிக்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பாலமுருகன், வெங்கடேசனை கைது செய்தனர். தப்பியோடிய ஜெயராமனை தேடி வருகின்றனர்.