ADDED : மார் 27, 2025 04:30 AM

கடலுார்: அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கடலுார் ஆயுதப்படை தலைமை காவலரை, வடக்கு மண்டல ஐ.ஜி.,அஸ்ரா கார்க் பாராட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் 25வது அகில இந்திய துப்பாக்கி சுடும்போட்டி கடந்த வாரம் நடந்தது. இதில் கடலுார் மாவட்ட ஆயுதப்படை தலைமை காவலர் வினோத்குமார், கார்பன் துப்பாக்கி 50 கெஜம் துாரம் பிரிவில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஊ.மங்கலம் போலீஸ் கான்ஸ்டபிள் அன்பரசன், இன்சாஸ் பிரிவில் பங்கேற்றார். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை தமிழக காவல்துறை அணி வென்றது.
துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வினோத்குமாரை, வடக்கு மண்டல ஐ.ஜி.,அஸ்ரா கார்க் பாராட்டினார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மிட்டல், மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார் உடனிருந்தனர்.