ADDED : ஏப் 05, 2025 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அருகே குட்கா பொருட்கள் விற்ற கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி மனைவி செண்பகம் என்பவர் தனது பெட்டி கடையில் குட்கா விற்பனை செய்தார். தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார், வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
இதையடுத்து அவரது கடைக்கு பரங்கிப்பட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.