ADDED : மே 06, 2025 06:48 AM

கடலுார்; வணிகர் தினத்தையொட்டி, நேற்று கடலுாரில் கடைகள் மூடப்பட்டிருந்தன.
தமிழகம் முழுவதும் வணிகர்கள் ஆண்டுதோறும் மே 5ம் தேதியை வணிகர் தினமாக கொண்டாடுகின்றனர். வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மதுராந்தகத்தில் நேற்று மாநாடு நடந்தது. அதனையொட்டி, ஒரு நாள் கடை அடைப்புக்கு வணிகர்கள் அழைப்பு விடுத்தனர். அதன் பேரில், கடலூரில் லாரன்ஸ்ரோடு, முதுநகர், மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை என பல்வேறு இடங்களில் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், நகைக் கடைகள், பாத்திரக் கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன.
நெல்லிக்குப்பம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையிலான நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்கள் 200 பேர் கடைகளை மூடினர். ஆனால் வர்த்தகர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் நாசர் அலி உட்பட அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் வழக்கம் போல் 50 கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர்.