/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதிப்பு 50 சதவீத வரி விதிப்பால் இறால் வளர்ப்போர்... மின் கட்டணத்தில் சலுகை வழங்க கோரிக்கை
/
பாதிப்பு 50 சதவீத வரி விதிப்பால் இறால் வளர்ப்போர்... மின் கட்டணத்தில் சலுகை வழங்க கோரிக்கை
பாதிப்பு 50 சதவீத வரி விதிப்பால் இறால் வளர்ப்போர்... மின் கட்டணத்தில் சலுகை வழங்க கோரிக்கை
பாதிப்பு 50 சதவீத வரி விதிப்பால் இறால் வளர்ப்போர்... மின் கட்டணத்தில் சலுகை வழங்க கோரிக்கை
ADDED : ஆக 29, 2025 03:06 AM

கடலுார்: அமெரிக்கா, இந்திய இறக்குமதி பொருளுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளதால் இறால் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கடல் உணவுப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதி பொருளாக பதப்படுத்தப்பட்ட இறால் தொடர்ந்து இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளும் இந்தியாவின் கடல் உணவுப் பொருட்களின் முக்கிய இறக்குமதியாளர்களாக உள்ளனர். 2022- - 23 ம் ஆண்டில், இந்தியா 63,969.14 கோடி ரூபாய் மதிப்புள்ள 17,35,286 மெட்ரிக் டன் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்தது.
இந்திய கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி சந்தைகளான, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு சவால்களை சந்தித்த போதிலும், கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியானது, தேவையின் அடிப்படையில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி, கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் 17.35 லட்சம் டன்னில் இருந்து, கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் 17.82 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. 40,013.54 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய பதப்படுத்தப்பட்ட இறால், கடல் உணவு ஏற்றுமதியில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது, 2023- - 24ம் ஆண்டில் பதப்படுத்தப்பட்ட இறால்களின் மொத்த ஏற்றுமதி 7,16,004 மெட்ரிக் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதில் அமெரிக்கா 2,97,571 மெட்ரிக் டன் பதப்படுத்தப்பட்ட இறால்களை இறக்குமதி செய் தது. அதைத் தொடர்ந்து சீனா 1,48,483 மெட்ரிக் டன்னும், ஐரோப்பிய ஒன்றியம் 89,697 மெட்ரிக் டன்னும், தென்கிழக்கு ஆசியா 52,254 மெட்ரிக் டன்னும், ஜப்பான் 35,906 மெட்ரிக் டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் 28,571 மெட்ரிக் டன்னும் இறக்குமதி செய்துள்ளன.
தற்போது அமெரிக்காவில் மட்டும் இந்திய இறக்குதி பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரிவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்க வியாபாரிகள் இறால் கொள்முதல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் வளர்ப்பு இறால் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது. இந்த பிரச்னை இன்னும் எவ்வளவு நாட்கள் தொடரும் என தெரியவில்லை.
இந்நிலையில் ஆயத்த ஆடைகள், துணிமணிகள் இறக்குமதி செய்யப்படும் நாடுகளை அணுகி கூடுதல் வியாபாரம் செய்வதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. அதுபோல் பல்வேறு நாடுகளுக்கு இறால் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய மாநில அரசுகள் தீவனத்தில் போடக்கூடிய வரிகளை குறைக்க வேண்டும். ஆந்திராவைப்போல ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 1.50 மானியம் வழங்கவேண்டும். என இறால் வளர்ப்போர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.