/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அதிரடியில் எஸ்.ஐ., நந்தி நகர் 'கப்சிப்'
/
அதிரடியில் எஸ்.ஐ., நந்தி நகர் 'கப்சிப்'
ADDED : செப் 25, 2024 03:41 AM
மாவட்டத்தில் திருமுதுகுன்றம் சப் டிவிஷனுக்குட்பட்ட அதிகாரம் படைத்த நந்தி நகரில் சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்ற எஸ்.ஐ., போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது, வெள்ளாற்றில் மணல் கடத்தலை தடுப்பது, கந்துவட்டி கும்பலை களையெடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களை கண்காணித்து வருகிறார்.
அதிலும், கஞ்சா, ஹான்ஸ், மதுபாட்டில்கள் போன்ற போதை பொருட்கள் விற்போர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் சமூக விரோத கும்பல்களும் செய்வதறியாது தலைமறைவாகி வருகின்றனர். மேலும், தனது டீமை வைத்து நந்தி நகர் எல்லைக்குட்பட்ட கஞ்சா விற்பதாக 60க்கும் மேற்பட்டோரை கண்காணித்து, கைது நடவடிக்கைக்கு தாயாராக உள்ளார்.
இதனால் பயந்துபோன சமூக விரோத கும்பல் ஆளைவிடுங்கடா சாமி என்ற கணக்கில் தலைமறைவாகி வருகின்றனர். இந்த நடவடிக்கையால் நந்திநகர் 'கப்சிப்' என இருப்பதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.