/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விசாரணையின்போது மயங்கி விழுந்த எஸ்.ஐ., விருத்தாசலம் கோர்ட்டில் பரபரப்பு

ADDED : மார் 14, 2024 06:33 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, சப் இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் 3ல் நேற்று காலை ஆவினங்குடி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை பதிவு செய்த, தற்போது ஆலடி போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியில் இருக்கும் துரைக்கண்ணு, கோர்ட்டில் ஆஜரானார்.
அவரிடம் நீதிபதி பிரபாச்சந்திரன் விசாரணை நடத்தினார். அப்போது, சப் இன்ஸ்பெக்டர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த போலீசார், சப் இன்ஸ்பெக்டரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்கு விசாரணையின்போது, சப் இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்ததால், விசாரணையை மற்றொரு தேதிக்கு நீதிபதி பிரபாசந்திரன் ஒத்திவைத்தார்.