தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மொபைல் பயன்பாட்டை குறைக்க சிலம்பம் சுற்றும் சாதனை நிழக்ச்சி

மொபைல் பயன்பாட்டை குறைக்க சிலம்பம் சுற்றும் சாதனை நிழக்ச்சி

மொபைல் பயன்பாட்டை குறைக்க சிலம்பம் சுற்றும் சாதனை நிழக்ச்சி


UPDATED : அக் 28, 2026 11:57 PM

ADDED : அக் 28, 2026 07:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 11:57 PM ADDED : அக் 28, 2026 07:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் விருதை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், ஆல் இந்தியா புக் ரெக்காட் மற்றும் விருதை வீரன் சிலம்பம் கலைக்கூடம் ஆகியன சார்பில், 2 மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி நடந்தது.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாட்டை குறைக்கவும், சிலம்ப கலையை மீட்டெடுத்து, மாணவர்களின் தன்னம்பிக்கை, உடல் வலிமை, மனஉறுதி மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க இந்த போட்டி நடத்தப்பட்டது.

இதில், ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் கலந்து கொண்டு இடைவிடாமல் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

இதில், பங்கேற்ற வீரர்களுக்கு விருதை வித்யாலயா கல்விக்குழும தலைவர் செந்தில், செயலர் மதியழகன், பொருளாளர் அருள்குமார் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினர். ஏற்பாடுகளை விருதை வீரன் கலைக்கூடம் சற்குணராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us