/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.ஐ.ஆர்., பணி : கலெக்டர் ஆய்வு
/
எஸ்.ஐ.ஆர்., பணி : கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 21, 2025 05:35 AM
குறிஞ்சிப்பாடி: வாக்காளர் கணக்கெடுப்பு பணிகளை கலெக்டர், குறிஞ்சிப்பாடியில் ஆய்வு செய்தார்
தேர்தல் ஆணையம் உத்தரவின் படி கடலுார் மாவட்டத்தில் உள்ள, 9 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகிறது.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்கள் இல்லங்களுக்கு சென்று, கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு வருகிறது.
வழங்கப்பட்ட படிவங்களை திரும்பப் பெறுவது, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அரசு அலுவலர்கள் மூலம் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இப்பணிகளை குறிஞ்சிப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
தனித்துணை கலெக்டர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கமலம், குறிஞ்சிப்பாடி தாசில்தார் விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

