/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பணித்தள பொறுப்பாளர்கள் வசூல் வேட்டை
/
பணித்தள பொறுப்பாளர்கள் வசூல் வேட்டை
ADDED : மே 14, 2025 12:40 AM

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சிகளிலும் குளங்கள், வாய்க்கால்களில் முட்புதர்கள் அகற்றி துார்வாருதல், ஏரி, குளக்கரையில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
ஊராட்சி தலைவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு வேண்டிய நபர்களை பணித்தள பொறுப்பாளர்களாக நியமித்தனர். ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிந்து 5 மாதங்கள் ஆகியும் பணித்தள பொறுப்பாளர்கள் மாற்றம் செய்யப்படாமல் உள்ளனர்.
பணித்தள பொறுப்பாளர்களுக்கு 100 நாள் வேலையில் 380 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகின்றன. இவர்கள், தங்களுக்கு வேண்டிய நபர்கள் மற்றும் வேலைக்கு வராத நபர்களின் அட்டைகளை பதிவு செய்து பணி வழங்குகின்றனர்.
பணிக்கு வராத நபர்களின் பதிவேடு அட்டையை வாங்கி வைத்து கொண்டு அவர்கள் பணி செய்தது போல் கணக்கு காட்டி வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கும் போது, தலா 500 ரூபாயை பணித்தள பொறுப்பாளர்கள் வசூல் செய்து வருகின்றனர்.
பணித்தள பொறுப்பாளர்கள் மூலமாக முன்னாள் ஊராட்சி தலைவர்களும் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெறுகின்றனர். எனவே, மாவட்டத்தில் உள்ள சில ஒன்றியங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.