/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிவபாரதி மெட்ரிக் பள்ளி சாதனை
/
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிவபாரதி மெட்ரிக் பள்ளி சாதனை
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிவபாரதி மெட்ரிக் பள்ளி சாதனை
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிவபாரதி மெட்ரிக் பள்ளி சாதனை
ADDED : மே 21, 2025 11:30 PM

விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் சிவபாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் படித்த 34 மாணவர்கள், பத்தாம் வகுப்பில் படித்த 69 மாணவர்கள் அரசு பொது தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பில் 400க்கும் மேல் 52 மாணவர்கள், 450க்கும் மேல் 32 மாணவர்கள் பெற்று, தொடர்ந்து 5வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். மேலும், பத்தாம் வகுப்பில் மாணவி ஷிவானி 493 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பெற்றார். நிவேதா, ஐஸ்வர்யா 491 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், திவ்யஸ்ரீ 490 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
பிளஸ் 1 வகுப்பில் மாணவி ரம்யா 572 மதிப்பெண் பெற்று முதலிடம், ஆர்த்தி 569 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாதேஷ் 559, மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். பத்தாம் வகுப்பில் கணித பாடத்தில் 2 மாணவர்கள், அறிவியல் பாடத்தில் 2 மாணவர்கள், சமூக அறிவியல் பாடத்தில் 3 மாணவர்கள் சென்டம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிளஸ் 1 வகுப்பில், கணினி அறிவியல் பாடத்தில் 2 மாணவர்கள், சென்டம் மதிப்பெண் பெற்றுள்ளனர். பொதுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவர்களை, பள்ளியின் தாளாளர் சிவநேசன் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
முதல்வர் ஆனந்தபாஸ்கர் மாணவர்களுக்கு சால்வை அணிவித்தார். ஆசிரியர் அஞ்சம்மாள் வரவேற்றார். இதில், பள்ளியின் செயலர் சரண்யா, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியர் சிலம்பரசன் நன்றி கூறினார்.