தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நான்கு வழி நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள்...மந்தம்!: விருதை - ராமநத்தம் சாலையில் விபத்து அபாயம்

நான்கு வழி நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள்...மந்தம்!: விருதை - ராமநத்தம் சாலையில் விபத்து அபாயம்

நான்கு வழி நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள்...மந்தம்!: விருதை - ராமநத்தம் சாலையில் விபத்து அபாயம்


UPDATED : ஆக 28, 2026 07:29 AM

ADDED : ஆக 27, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2026 07:29 AM ADDED : ஆக 27, 2026 07:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்:நான்கு வழி நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி மந்தமாக நடப்பதால் விருத்தாசலம் - ராமநத்தம் (தொழுதுார்) சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பதுடன் விபத்துகள் ஏற்படுகிறது.

மாவட்டத்தில் விருத்தாசலம் - ராமநத்தம் (தொழுதுார்) பிரதான நெடுஞ்சாலையாக உள்ளது. இவ்வழியாக திருச்சி, கடலுார், புதுச்சேரி, சேலம், சென்னை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர்.

இச்சாலையில் குறுகிய பாலங்கள், வளைவு சாலைகளால், விருத்தாசலம் - ராமநத்தம் வரையிலான, 42 கி.மீ., துாரத்தை கடந்து செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலானது. திருச்சி - கடலுார், திட்டக்குடி - சென்னை, திட்டக்குடி - சிதம்பரம் பகுதிகளுக்கான பயண நேரம் அதிகமானதோடு, விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்தன.

இச்சாலையில் சந்திக்கும் கடலுார் - விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையாக அகலப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதேபோன்று, விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.

குறுகிய சாலையாக இருந்த விருத்தாசலம் - ராமநத்தம் சாலை கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன் மத்திய சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 49 கோடியில் 7 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் விபத்துகள் குறைந்தபாடில்லை.

விபத்துகள் மற்றும் போக்குவரத்து பாதிப்புகளை தடுக்க விருத்தாசலம் - ராமநத்தம் சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதையேற்று, கடந்தாண்டு நவம்பரில் விருத்தாசலம் - ராமநத்தம் சாலை நான்குவழி சாலையாக தரம் உயர்த்த அப்போதைய முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 150 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகளும் துவங்கியது.

அதில், முதற்கட்டமாக கடந்தாண்டு, திட்டக்குடி முதல் அரங்கூர் வரை, ரூ. 70 கோடியில் 10 கி.மீ., துாரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இரண்டாம் கட்டமாக, ரூ. 80 கோடியில் கருவேப்பிலங்குறிச்சி - திட்டக்குடி வரையிலான நான்கு வழி சாலை பணிகள், கடந்த 8 மாதங்களுக்கு முன் துவங்கியது.

அதில், நந்தப்பாடி, பெண்ணாடம், இறையூர், ஆவினங்குடி பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகள் துவங்கிய நிலையில், சாலையோர பள்ளங்களில் ஆங்காங்கே ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளது. ஆனால், சாலையோர மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் இதுவரை அகற்றாமல் நான்குவழி சாலை விரிவாக்க பணிகளில் மந்தமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனால், நந்தப்பாடி, முருகன்குடி, பெண்ணாடம், ஆவினங்குடி, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பதுடன் விபத்துகளும் நாளுக்குநாள் அறங்கேரி வருகிறது.

எனவே, மந்தமாக நடந்து வரும் விருத்தாசலம் - ராமநத்தம் (தொழுதுார்) சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us