UPDATED : அக் 16, 2026 08:50 PM
ADDED : அக் 16, 2026 08:46 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழா நடந்தது.
பள்ளி செயலர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நிர்வாக குழு துணை தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் சுந்தரி வரவேற்றார். முன்னாள் மாணவர் லலித்குமார் நினைவாக அவரது பெற்றோர் மோகன்-பத்மா தம்பதியர் ஸ்மார்ட் வகுப்பறையை பள்ளிக்கு அர்ப்பணித்தனர். டாட்டா நிறுவன மேலாளர் சிவப்பிரசாத் ஸ்மார்ட் திரை குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில் அணி வணிகர் முத்துக்குமரேசன், ஆசிரியர்கள் சுரேஷ் குமார், புஷ்பராஜ், கீதா, மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழாசிரியர் கல்யாணராமன் நன்றி கூறினார்.
