/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் அரிசி வெளி மாவட்டங்களுக்கு கடத்தல் அதிகரிப்பு! புட்செல் போலீசில் சிக்கியது 75 டன் அரிசி
/
ரேஷன் அரிசி வெளி மாவட்டங்களுக்கு கடத்தல் அதிகரிப்பு! புட்செல் போலீசில் சிக்கியது 75 டன் அரிசி
ரேஷன் அரிசி வெளி மாவட்டங்களுக்கு கடத்தல் அதிகரிப்பு! புட்செல் போலீசில் சிக்கியது 75 டன் அரிசி
ரேஷன் அரிசி வெளி மாவட்டங்களுக்கு கடத்தல் அதிகரிப்பு! புட்செல் போலீசில் சிக்கியது 75 டன் அரிசி
ADDED : நவ 11, 2025 06:22 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிதியாண்டில் இது வரை 75 டன் ரேஷன் அரிசியை புட்செல் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் ரேஷன் கார்டி ற்கு அதிக பட்சமாக 20 கிலோ அரிசி இலவச மாக வழங்கப்படுகிறது. இது தவிர பாமாயில், துவரம்பருப்பு, சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்களும் வழங்கப் படுகின்றன.
இதில் அதிகளவில் வழங்கப்படுவது ரேஷன் அரிசி மட்டுமே. இலவசமாக கிடைக்கிறது என்பதால் அரிசி வாங்கி அதை பயன்படுத்துவது மிகவும் குறைவாக உள்ளது. தமிழகத்தில் அடித்தட்டு மக்கள் மட்டுமே ரேஷன் அரிசியை உணவுக்காக பயன்படுத்துகின்றனர்.
மற்றவர்கள் இட்லி போன்ற மாவுப்பொருட்களில் சேர்க்க ரேஷன் அரிசியை பயன்படுத்துகின்றனர். ரேஷன் கடைகளில் அளிக்கும் அரசி குண்டு அரிசியாக இருந்தால் மவுசு அதிகம். குண்டு அரிசி என்பது மோட்டா ரகமாக இருந்தாலும் இட்லிக்கு அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
மாதந்தோறும் ரேஷன் கடைகளில் வாங்கிசெல்லும் அரிசி வீட்டிலேயே ஸ்டாக் வைக்கப்படுவதால் வண்டு பிடித்துவிடுகிறது. இந்த வண்டு வீடுகள் முழுதும் பரவி குடியிருப்பவர்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறது.
வீடுகளில் அதிக நாட்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்கள் வண்டு பிடித்து விடுவதால் யாருக்கும் தெரியாமல் அரிசியை குப்பையிலே கொட்டி விடும் நிலையும் உள்ளது.
இதனால், வீட்டில் வைத்திருப்பதை விட வீதிகளில் வருபவர்களிடம் கிலோ 5 முதல் 7 ரூபாய்க்கு விற்பனை செய்துவிடுகின்றனர். அது மட்டுமின்றி ரேஷன் கடைக்காரர்களிடம் அரிசியை வாங்கி கடத்தலில் ஈடுபடுகின்றனர்.
ரேஷன் அரிசியை கோழி, மீன் தீவனத்திற்காக அதிகளவில் விலை கொடுத்து வாங்குவதால் வெளி மாவட்டம், வெளி மாநிலத்திற்கு கடத்துவது அதிகரித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் 9ம் தேதி பண்ருட்டி அருகே சாந்தி என்பவர் வீட்டில் 1200 கிலோ ரேஷன் அரிசி, 9 எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த மே மாதத்தில் பெண்ணாடம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டு 3 டன் அரிசி பறிமுதல் செய்தனர்.
பெண்ணாடம் அருகே பூவனுாரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரேஷன் அரிசி கடத்தல் கண்டறிந்து ஆரிப், சித்து, வெற்றிவேல், விஜய் ஆகியோர் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த செப்., மாதம் ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அருகே போலீசார் நடத்திய சோதனையில், பிக்அப் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது.
வேனை ஓட்டி வந்த திட்டக்குடி அடுத்த செவ்வேரி ராகுல், 21; குழுமூர் சங்கர், 28; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி தொ.செங்கமேடு கிராமத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த டாடா ஏஸ் வேனை ஆவினங்குடி போலீசார் சோதனை செய்ததில் ஒரு டன் எடை ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. வேன் டிரைவர் சிங்கபெருமாள், 26; உடன் வந்த குழுமூரைச்சேர்ந்த செல்வம், 27; ஆகியோரை கைது செய்தனர்.
கடந்த 8 ம் தேதி பெண்ணாடம் அடுத்த கொல்லத்தங்குறிச்சியில் பால் வேன் என எழுதப்பட்டிருந்த வேனில், திருச்சி தென்னுார், ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த அப்துல் சுக்கூர்,36; என்பவர் 1,250 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதை கண்டறிந்து கைது செய்தனர்.
இந்த நிதியாண்டில் கடலுார் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்டதாக 75 டன் ரேஷன் அரிசி, 1050 லிட்டர் மண்ணெண்ணெய் புட்செல் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

