தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காருக்குள் புகுந்த நாக பாம்பு விருத்தாசலத்தில் பரபரப்பு

காருக்குள் புகுந்த நாக பாம்பு விருத்தாசலத்தில் பரபரப்பு

காருக்குள் புகுந்த நாக பாம்பு விருத்தாசலத்தில் பரபரப்பு


ADDED : செப் 04, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் எலக்ட்ரிக் காருக்குள் நாக பாம்பு புகுந்ததால் பரபரப்பு நிலவியது.

வேப்பூர் கூட்ரோட்டை சேர்ந்தவர் கணேஷ்பாபு. தனியார் நிறுவன ஊழியர். இவர் டாடா நிறுவன எலக்டரிக் காரில், நேற்று காலை குடும்பத்துடன் கடலுாருக்கு புறப்பட்டார். விருத்தாசலம் பாலக்கரை அருகே உள்ள ஓட்டல் முன் காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றனர்.

அப்போது, காரின் முன்புற இன்ஜினுக்குள் பாம்பு சென்றதை, அங்கிருந்த சிலர் பார்த்து கணேஷ்பாபுவிடம் கூறினர். . அதிர்ச்சியடைந்த அவர் பெரியார் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு காரை ஓட்டி சென்றார்.

தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான குழுவினர், கார் இன்ஜினுக்குள் புகுந்த பாம்பை தேடினர். அதில், 2 அடி நீள நாகபாம்பு பேட்டரியின் பின்புறம் பதுங்கியிருப்பது உறுதியானது. ஆனால், எலக்ட்ரிக் கார் என்பதால், இரும்பு கம்பி, பாம்பு பிடி சாதனம் என எதையும் உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கார் நிறுவன ஊழியர்களிடம் தொடர்பு கொண்டபோது, கார் இயங்கும் போது வெளியே வந்துவிடும்.

உள்ளே இருக்கும் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என உறுதியளித்தனர். இதையடுத்து, கணேஷ்பாபு குடும்பத்துடன் காரில் புறப்பட்டுச் சென்றனர். 30 நிமிடங்கள் தீயணைப்பு படையினர் போராடியும், பாம்பை மீட்க முடியவில்லை.

இந்த சம்பவத்தால், விருத்தாசலத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us