ADDED : செப் 04, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு,செப்.5–
விவசாய தொழிலாளி முந்திரி தோப்பில் மர்ம மான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பத்திரக்கோட்டை அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பாலு,55; தொழிலாளி. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள முரளி என்பவரின் முந்திரி தோப்பில் இறந்து கிடந்தார். அருகில் பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது.
இதுகுறித்து அவரது மனைவி மாலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
