/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் கருவூலம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
/
புவனகிரியில் கருவூலம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
புவனகிரியில் கருவூலம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
புவனகிரியில் கருவூலம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ADDED : பிப் 17, 2024 04:57 AM

புவனகிரியில் அரசு கருவூலம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புவனகிரி தொகுதி, தாலுகா, ஒன்றியம் மற்றும் பேரூராட்சியின் தலைமையிடமாக உள்ளது. இப்பகுதியில் அரசு கருவூலம் இல்லாதததால், ஓய்வூதியதாரர்கள் ஓய்வுதியம் பெறுவதற்கும், பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கும் சிதம்பரம் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் கால விரயம், கூடுதல் செலவாகிறது. முத்திரை தாள்கள், ஸ்டாம்புகள், முக்கிய கோப்புகளுக்காக சிதம்பரம் செல்கின்றனர். அவர்கள் அலைகழிக்கப்படுகின்றனர். இந்நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது.
புவனகிரியில் தாலுகா அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படும் நிலையில், இது குறித்து அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை.
எனவே, இங்கு பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஓய்வு ஊதியர்கள் நலன் கருதி, புவனகிரியில் கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புவனகிரியில் அரசு கருவூலம் அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரிக்கையை தொகுதி எம். எல்.ஏ., அருண்மொழிதேவன் சட்டசபையில் வலியுறுத்தி பேசினார். ஆனால், அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது.
ஜெயப்பிரியா ரகுராமன், பேரூராட்சி கவுன்சிலர்.
ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களின் நலன் கருதி, அரசு கருவூலத்தை புவனகிரியில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயராஜ், அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு மாவட்ட செயலாளர்.
தற்போது மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்கள், புவனகிரி, பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் தேவைகளுக்கு சிதம்பரம் சென்று அல்லாடி வருகின்றனர்.
பொதுமக்கள் நலன் கருதி புவனகிரியில் அரசு கருவூலம் அமைக்க வேண்டும்.
சிவஞானம்,
அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி.