/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தினமலரின் பங்களிப்பால் சமூக பிரச்னைக்கு தீர்வு
/
தினமலரின் பங்களிப்பால் சமூக பிரச்னைக்கு தீர்வு
ADDED : செப் 05, 2025 11:56 PM

கடலுார்:'தினமலர்' நாளிதழ் மக்களுக்கு இப்போது போல் எப்போதும் சேவை புரிய வேண்டுமென, கடலுார் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் டாக்டர் அனிதா ரமேஷ் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
'தினமலர்' நாளிதழ் மக்களின் நலனுக்காகவும், சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. செய்திகள் துல்லியமாகவும், நடுநிலையாகவும் உள்ளன. மக்களுக்கு ஒரு நல்ல கண்ணோட்டத்தை வழங்குகிறது.
எல்லா தரப்பு மக்களுக்கும், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவருக்கும் தேவைப்படும் செய்திகள், விளம்பரங்கள், கருத்துகள் அனைத்தையும் உடனுக்குடன் துல்லியமாக, சிறப்பான முறையில் தருகிறது. 'தினமலர்' நாளிதழ் ஒவ்வொரு தனிமனிதனின் வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் அடித்தளமாக உள்ளது.
ஒவ்வொரு தனிமனிதனின் வெற்றியே, சமுதாயத்தின் வெற்றி. வெற்றிக்கான வழிவகுக்கும் பவளவிழா காணும் 'தினமலர்' நாளிதழ் பல நுாறாண்டுகள் கடந்து, மக்களுக்கு இப்போது போல் எப்போதும் சேவை புரிய நன்றிகளோடு வாழ்த்தி மகிழ்கிறோம்.