/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அருண் மருத்துவமனையில் தைராய்டு பிரச்னைக்கு தீர்வு
/
அருண் மருத்துவமனையில் தைராய்டு பிரச்னைக்கு தீர்வு
ADDED : மே 24, 2025 11:49 PM

கடலுார்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென, திட்டக்குடி அருண் மருத்துவமனை டாக்டர் கொளஞ்சிநாதன் கூறினார்.
இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது:
தைராய்டு சுரப்பி உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துதல், சீரான இதய துடிப்பு, ரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கு, பெண்களின் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துதல், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்டவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.
தைராய்டு கட்டி 3 செ.மீ.,க்கு கீழே இருந்து அதன் செயல்பாடுகள் நார்மலாக இருப்பின் எந்த மருத்துவ சிகிச்சையும் தேவைப்படாது. சாதாரண கட்டி 3 செ.மீ.,க்கு மேல் வளர்ந்து பிரச்னை ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். கேன்சர் கட்டியாக இருந்தால் கட்டாயம் அறுவை சிகிச்சை தேவை. தைராய்டு பிரச்னைகளை தவிர்க்க அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.
பச்சை காய்கறிகளில் அயோடின் சத்து அதிகமாக இருப்பதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.