ADDED : ஏப் 07, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம், புதுஇளவரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கனகவேல், 85; இவரது மகன் வேல்முருகன் தனக்கு ஒதுக்கிய நிலத்தை கிரயம் எழுதி தருமாறு கேட்டுள்ளார்.
இதனால் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த வேல்முருகன் உறவினர் புரு ேஷாத்தமன் ஆகியோர் சேர்ந்து கனகவேலை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார், வழக்குப் பதிந்து வேல்முருகனை கைது செய்து, புருேஷாத்தமனை தேடி வருகின்றனர்.

