ADDED : பிப் 02, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அருகே மதுகுடித்துவிட்டு வந்த மகனை தந்தை கண்டித்ததால், மனமுடைந்த மகன் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடலுார் அடுத்த கீழ்அழிஞ்சிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் ரவிக்குமார், 17; இவர் அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்த ரவிக்குமார், நேற்று முன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இதை அறித்த ரமேஷ் மகனை கண்டித்தார். மீண்டும் நேற்று கண்டித்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த ரவிக்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காலை 10மணிக்கு புடவையால் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.