ADDED : ஜன 20, 2026 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில் மகன் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்தார்
குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் அனுராஜ், 19. கடலுார் தனியார் கல்லுாரியில் பி.ஏ., தமிழ் படித்து வருபவர். பொங்கல் பண்டிகையை ஒட்டி கல்லுாரி விடுமுறையால் வீட்டில் இருந்த அனுராஜ், நேற்று முன்தினம் திடீரென மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மகன் மாயமானது குறித்து கோபாலகிருஷ்ணன் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

