
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் மாநகர காங்., சார்பில் காங்., முன்னாள் தலைவர் சோனியா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
மாநகரத் தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், தொகுதி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் காமராஜ், கிஷோர், வட்டாரத் தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் திலகர் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்கள் பாரத்திபன், ராஜ்குமார், சாந்தி, நகர செயலாளர்கள் செந்தில், பாலகுரு, ராமஜெயம், மணி, துணைத் தலைவர் சங்கர் பங்கேற்றனர்.