/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சண்முகநாதசுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி
/
சண்முகநாதசுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி
ADDED : அக் 28, 2025 06:02 AM

பண்ருட்டி: தொரப்பாடி சண்முகநாதசுவாமி கோவிலில் கந்தசஷ்டி முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது.
விழாவையொட்டி கடந்த 22ம்தேதி காலை 9:00 மணிக்கு காப்புகட்டுதல் துவங்கி தினந்தோறும் உற்சவர் சண்முகநாதசுவாமி வள்ளிதேவசேனாவுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நேற்று 27 ம்தேதி காலை 9:00 மணிக்கு அபிஷேகம், மாலை 6:30 மணிக்கு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும். பின் வேல் அபிஷேகம், உற்சவர் சண்முகநாதர் மயில்வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலை திருக்கல்யாண உற்சவம்,நாளை 29 ம்தேதி காலை சம்ஹார தரிசத்ேஹாமம், மாலை சத்ரு சம்ஹார த்ரிசத் அர்ச்சனையும் , வரும் 30 ம்தேதி காலை விடையாற்றி உற்சவம், மாலை அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.

