/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்
/
சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்
ADDED : அக் 29, 2025 07:29 AM

கடலுார்: கடலுார் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலுார் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. 26ம் தேதி சக்திவேல் பெறும் விழா நடந்தது.
நேற்றுமுன்தினம் மாலை வீரபாகு தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
இரவு வீரபாகு துாது, சிங்கமுகன் வதம், கம்பத்துப்பாடலை தொடர்ந்து சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று இரவு சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், புதுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த சூரசம்ஹார விழா, சுவாமி திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

