/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சோதனைச்சாவடியில் எஸ்.பி., ஆய்வு
/
சோதனைச்சாவடியில் எஸ்.பி., ஆய்வு
ADDED : ஜன 01, 2026 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில், மது கடத்தலை தடுக்க எஸ்.பி., தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி, கடலுார் ஆல்பேட்டை சோதனைச்சாவடி வழியாக மது கடத்தப்படுவதை தடுக்க எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்தி, மதுபாட்டில்கள் கடத்திச்செல்லப்படுகிறதா என போலீசார் சோதனை செய்தனர். அதில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை கீழே கொட்டி அழித்தனர்.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

