/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மத உணர்வை துாண்டும் பேனர் எஸ்.பி., ஜெயக்குமார் எச்சரிக்கை
/
மத உணர்வை துாண்டும் பேனர் எஸ்.பி., ஜெயக்குமார் எச்சரிக்கை
மத உணர்வை துாண்டும் பேனர் எஸ்.பி., ஜெயக்குமார் எச்சரிக்கை
மத உணர்வை துாண்டும் பேனர் எஸ்.பி., ஜெயக்குமார் எச்சரிக்கை
ADDED : மே 15, 2025 02:21 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மத, ஜாதி உணர்வைத் துாண்டும் வாசகங்கள் பேனர்களில் இடம் பெறக்கூடாது என, எஸ்.பி.,ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் நடக்கும் கோவில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் பேனர்களில் மத ரீதியாகவும், ஜாதி உணர்வை துாண்டும் வகையிலும் வாசகங்கள் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
அத்தகைய வாசகங்கள் சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி அச்சக உரிமையாளர்கள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை மீறி சட்டத்திற்கு புறம்பான வாசகங்களை அச்சடிக்கக் கூறுபவரின் பெயர், முகவரி, செல்போன் விபரங்களை பதிவு செய்து போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.
டிஜிட்டல் பேனர்களில் மத, ஜாதி உணர்வுகளை துாண்டும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தால் அதனை இடம் பெற செய்யும் நபர்கள், பிரிண்ட் செய்யும் அச்சக உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.