/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சொந்த கிராம மக்களுக்காக 'ஹைமாஸ்' : போலீஸ் தம்பதிக்கு எஸ்.பி., பாராட்டு

ADDED : அக் 22, 2025 12:41 AM

கி ராம மக்களுக்காக தன் சொந்த செலவில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 'ஹைமாஸ்' விளக்கு அமைத்துக் கொடுத்த காவலர் தம்பதியை எஸ்.பி., பாராட்டினார்.
பண்ருட்டி வட்டம், கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்து தற்போது அதிவிரைவு படையில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி காயத்ரி. கடலுார் ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார். தனது சொந்த கிராமம் கொங்கராயனுார் பஸ் நிறுத்தத்தில் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதை கண்டு தனது சொந்த ஊர் மக்கள் பாதுகாப்பிற்காக, தனது சொந்த பணம் ரூபாய் 60 ஆயிரம் செலவில் 'ஹைமாஸ்' விளக்கு அமைத்து அக்கிராமத்திற்கே வெளிச்சம் அளித்துள்ளார்.
பொதுமக்கள் பயன் பெறும் வகையில் 'ஹைமாஸ்' விளக்கு அமைத்த காவலர் அருண்குமார், அவரது மனை வி காயத்ரி ஆகியோர்களை கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.