/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்து எஸ்.ஐ.,க்கு எஸ்.பி., பாராட்டு
/
போக்குவரத்து எஸ்.ஐ.,க்கு எஸ்.பி., பாராட்டு
ADDED : மார் 17, 2025 06:36 AM

கடலுார், : சிறப்பாக பணிபுரிந்த பண்ருட்டி போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டருக்கு டி.ஜி.பி., மற்றும் எஸ்.பி., பாராட்டு தெரிவித்தனர்.
பண்ருட்டி போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் தேவநாதன், கடந்த 10ம் தேதி, பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வயதான மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியே வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதுவது போல் வந்துள்ளது.
அப்போது பணியில் இருந்த தேவநாதன், மூதாட்டியை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்.
டி.ஜி.பி., சங்கர் ஜுவால், இச்செயலை பாராட்டி போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் தேவநாதனுக்கு வெகுமதி வழங்கினார்.
அவரை கடலுார் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமாரும், நேரில் அழைத்துப் பாராட்டினார்.