/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஞ்சா, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி முற்றிலும் அகற்ற எஸ்.பி., அதிரடி
/
கஞ்சா, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி முற்றிலும் அகற்ற எஸ்.பி., அதிரடி
கஞ்சா, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி முற்றிலும் அகற்ற எஸ்.பி., அதிரடி
கஞ்சா, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி முற்றிலும் அகற்ற எஸ்.பி., அதிரடி
ADDED : அக் 29, 2025 07:27 AM
கடலுார் மாவட்டத்தில் போதைப்பொருட்கள், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையை அறவே அகற்ற எஸ்.பி., ஜெயக்குமார் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார்.
கஞ்சா விற்பனையை மாவட்டம் முழுவதும் பெருக்கிய வியாபாரிகளை பிடித்ததோடு, அவர்களுக்கு ஆந்திராவில் இருந்து அனுப்பப்படும் மொத்த வியாபாரியையும் கைது செய்தது மூலம் ஓரளவு கட்டுக்குள் உள்ளது.
அதேப்போல அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டு விற்பனை கனஜோராக நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க எஸ்.பி., சிறப்பு தனிப்படை நியமனம் செய்து விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் விளைவாக கடந்த மாதம் சிதம்பரத்தில் பிடிபட்ட லாட்டரி டிக்கெட்டில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு உட்பட 7 போலீஸ் காரர்கள் கூண்டோடு மாற்றப்பட்டனர்.
அதேப்போல கடலுாரில் பிடிபட்ட லாட்டரி டிக்கெட் விற்பனையில் 4 போலீஸ்காரர்கள் மாற்றப்பட்டனர். கடலுாரில் நேற்று முன்தினம் பிடிபட்ட லாட்டரி வியாபாரிகளிடம் இருந்து 23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பிடித்த போலீசார்கள் 13 லட்சம் ரூபாயை மட்டும் கணக்கில் காண்பித்து விட்டு மீதியுள்ள 10 லட்சம் ரூபாயை 'ஸ்வாகா' செய்து தீபாவளியை ஓட்டலாம் என போலீசார்கள் கணக்குப் போட்டனர்.
அதில் ஏதோ சந்தேகம் இருப்பதாக உணர்ந்த எஸ்.பி., மீண்டும் சிறப்பு படை ஒன்றை அனுப்பி மீண்டும் விசாரிக்க கூறியுள்ளார். அப்போதுதான் 10 லட்சம் ரூபாய் ஸ்வாகா செய்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இதை தொடர்ந்து முழுத்தொகையான 23 லட்சம் ரூபாயையும் கணக்கில் கொண்டு வந்தது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட போலீசார்களை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
கடலுார் மாவட்டத்தில் போலீசார் செய்யும் தவறுகள் எந்த அதிகாரிகளும் பொதுவாக வெளிக்கொண்டு வருவதில்லை. ஆனால் எஸ்.பி., ஜெயக்குமார் தவறு செய்யும் போலீசாருக்கு கைமேல் தண்டனை உறுதி. அதே சமயம் சிறப்பாக பணியாற்றிய போலீசார்களை அவர் பாராட்டவும் தவறியதில்லை.

