/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விதை உற்பத்தி தொகை நிலுவை வழங்காததால் விவசாயிகள் பாதிப்பு மனு கொடுத்தும் அதிகாரிகள் அலட்சியம்

ADDED : அக் 29, 2025 07:27 AM
வடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களில், விவசாயிகள் மணிலா, நெல், எள் ஆகியவற்றை விதை உற்பத்திக்காக விளைவித்து, அரசு பண்ணைகளில் ஒப்படைத்து வருகின்றனர்.
சிறு, குறு விவசாயிகள் முதல், பெரிய விவசாயிகள் வரை இந்த விதை உற்பத்தி பணியில் ஈடுபட்டு பயனடைந்து வருகின்றனர்.
இவர்கள் உற்பத்தி செய்யும் விதையின் சாகுபடி செய்யும் நிலங்களை அரசு சார்பில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தரமான விதை பொருட்களை விவசாயிகளிடமிருந்து அரசு பண்ணைகளில் பெற்று, விதை உற்பத்திக்கான பணம் மற்றும், உற்பத்தி மானியம் ஆகியவற்றை முறையாக தந்து வந்தனர்.
விவசாயிகளுக்கான உற்பத்தி மானிய தொகை, ரூ.,50 ஆயிரம் முதல், ரூ.,1 லட்சம் வரை அவர்கள் அளிக்கப்படும் விதை மூட்டைகளின் எண்ணிக்கையை பொருத்து கிடைத்து வந்தது.
இந்த ஆண்டு விதை உற்பத்தி பணம் மட்டும் கிடைக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உற்பத்தி மானிய தொகை இன்னும் வழங்கப்படவில்லை.
இது குறித்து கடலூர் கலெக்டர் அலுவலக விவசாயிகள் குறைக்கேற்பு கூட்டம், வேளாண்துறை உற்பத்தி ஆணையர், முதல்வர் தனிப்பிரிவு வரை விவசாயிகள் மனு அளித்தும் பயனில்லை.
நிலுவை தொகை கிடைக்காததால் விவசாயிகள் மன உளைச்சலில் உள்ளனர். இதனால் விவசாயிகள் மத்தியில் அடுத்த பட்டத்திற்கான விதை உற்பத்தி பதிவுகளை புதுப்பிக்கும் ஆர்வம் குறைந்து வருவதாக, விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.